மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மேக்கிழார்பட்டிபகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம் அவர்களிடம் மனு அளித்தனர்.


மேக்கிழார்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது நீண்டகால கோரிக்கையான பட்டா வழங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.


மனுவைப் பெற்றுக்கொண்ட எஸ்.ஓ.பி. விஜய் மகாலிங்கம், பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலித்து, தகுதியுடைய பொதுமக்களுக்கு பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால், நீண்டகாலமாக பட்டா பெறுவதற்காக காத்திருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.