முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சியின் போது நடிகையும், கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசனை சந்திப்பு பேசிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் உடற்பயிற்சி செய்வது வழக்கம். 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது சைக்கிளிங் செல்லும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகும். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் ஜிம்மில் ஸ்டாலின் செய்த உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் வெளியாகி வந்தன.

அண்மை காலமாக அடையாறு பூங்காவில் ஸ்டாலின் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் ஸ்டாலின் நடைபயிற்சியில் ஈடுபடும் போது அங்கு வரும் பிரபலங்கள், அரசியல்வாதிகளை சந்தித்து சில நிமிடங்கள் உரையாடுவார். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்ட போது, நடிகையும், மநீம தலைவருமான ஸ்ருதிஹாசனும் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

இதனையடுத்து சில நிமிடங்கள் இருவரும் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்த நிலையில் ஸ்டாலின் - ஸ்ருதிஹாசன் சந்தித்த புகைப்படம் சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது. டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டிற்கு 2 நாட்கள் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையிலும் கூட ஸ்டாலின் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருவது மக்கள் மத்தியில் பரவலாக உடற்பயிற்சி குறித்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.