விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விசில் சின்னம் தேர்தல் ஆணையம் மூலம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான் முதல் தேர்தலை எதிர்நோக்கிக் காத்திருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தனது வேட்பாளர்களுக்கான பொதுத் தேர்தல் சின்னம் கேட்டு இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகி இருந்தார். த.வெ.க. இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், விசில், ஆட்டோ ரிக்ஷா, மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலுடன் கூடிய விண்ணப்பத்தை கடந்த சில வாரங்களுக்கு முன் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார்.
இதையடுத்து விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விசில் சின்னம் தேர்தல் ஆணையம் மூலம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய்க்கு இந்த சின்னத்தை தேர்வு செய்ய சொன்னது அவரின் ஆஸ்தான ஜோசியர் என்று கூறப்படுகிறது. விசில் சின்னம் சுவரில் வரைவதற்கும், வாக்குப்பதிவு இயந்திரங்களில் தெளிவாகத் தெரிவதற்கும் எளிதாக இருப்பதால், பிரச்சார ரீதியாகச் சிறப்பாகச் செயல்படும். அந்த வகையில் விசில் சின்னம் விஜய்க்கு சாதகமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.