தென்காசி அருகே நேற்று ௨ தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பெண்கள் உள்பட 6பேர் பலியானார்கள். 35 பேர் காயமடைந்தனர். 5 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
தென்காசியில் இருந்து நேற்று காலை விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்தூருக்கு ஒரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இதே போல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து தென்காசிக்கு மற்றொரு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இந்த 2 பஸ்களிலும் ௧௦௦–க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
இந்த பஸ்கள் தென்காசிக்கும், கடையநல்லூருக்கும் இடையே இடைக்கால் துரைசாமிபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. அப்போது பஸ்சில் இருந்த பயணிகள் அலறினார்கள். சில பயணிகள் பஸ்களில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இந்த கோர விபத்தில் பெண்கள் உள்பட 6 பேர் அதே இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர். இது குறித்து இலத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தென்காசி கலெக்டர் கமல்கிஷோர், போலீஸ் சூப்பிரெண்டு அரவிந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்பு பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பலியான ௬ பேர் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் நீண்ட நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் ௩௫–க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ ர்களில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேல் சிகிச்சைக்காக நெல்லை பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்தில் பலியான 6 பேரில் 3 பேரின் பெயர் விவரங்கள் கிடைத்து ள்ளன. தென்காசி புதுக்குடி யைச் சேர்ந்த வனராஜ், கடையநல்லூரைச் சேர்ந்த தேன்மொழி, புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா, கற்பகவள்ளி மேலும் ௨ பேரின் பெயர் விவரம் தெரியவில்லை. இந்த விபத்து குறித்து இலத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தை ஏற்படுத்திய 2 பஸ்களின் உரிமங்களையும் ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.