தி.மு.க. இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது 49-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடங்களில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆதிக்கவாதிகளிடம் குவிந்திருந்த அதிகாரத்தை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்த தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் நமது பிறந்த நாளில் மரியாதை செலுத்தினேன். பேரறிஞர் அண்ணா வழியில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காப்போம். மாநில உரிமைகளையும், சமூக நீதியையும் நிலைநாட்டுவோம் என்று தெரிவித்துள்ளார். பிறந்த நாளையொட்டி அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.