காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்யமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து செல்வப்பெருந்தகை கூறியதாவது,

பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தி.மு.க. தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். விரைவில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார். இதற்கிடையே, தி.மு.க. - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு சுமூகமாக நடைபெற்று வருவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.