திருவண்ணாமலையில் நாளை (டிசம்பர் 14) நடைபெற உள்ள தி.மு.க. இளைஞர் அணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு குறித்து இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,
75 ஆண்டுகளைக் கடத்து, தமிழர்களின் மேம்பாட்டை முன்னிறுத்தி தன் அரசியய் பயணத்தை மேற்கொள்ளும் நிராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பது, இளைஞர் அணி. 1998-ல் முதல்வர் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட இளைஞர் அணி கழகத்துக்கு வலிமை சேர்த்து, களத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மாநிலம், மாவட்டம், மாநகரம், பேரூர், ஒன்றியம், கிளை, வட்டம் என்று தமிழகத்தில் எல்லாத் திசைகளிலும் வேர்விட்டிருக்கிறது கழக இனைஞர் அணி.
வழக்கமான நிர்வாக அமைப்புடன் இந்த ஆண்டு இரண்டு புதிய முன்னெடுப்புகளையும் இளைஞர் அணி மேற்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கட்சித் தலைவரது உத்தரவின் பேரில் முதற்கட்டமாக வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பை 14.12.2025, ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணியளவில் திருவண்ணாமலை கலைஞர் திடவில் நடத்தவிருக்கிறோம். 13 லட்சம் இளைஞர் அணி நிர்வாகிகள் கூடும் பிரம்மாண்ட நிகச்சியாக நடக்கவிருக்கும் இந்த இளைஞர் அணி நிர்வாக சந்திப்பில் முதல்வர் சிறப்புரை ஆற்றவிருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். வரவிருக்கும் 2026 சட்ட மன்றத் தேர்தலில் தலைவரே மீண்டும் முதல்வராவார். திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்னும் வெற்றிச் செய்திக்கு அடித்தளமாக இந்த 'இளைஞர் அணி மண்டல நிர்வாகிகள் சந்திப்பு அமையும் என்பது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.