அ.​தி.மு.க பொதுச் செய​லா​ளர் எடப்பாடி பழனிசாமி, மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம் என்ற பெயரில் எழுச்​சிப் பயணம் மேற்​கொண்டு வரு​கிறார். இது​வரை 175 தொகு​தி​களில் சுற்​றுப் பயணம் முடிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், வரும் 28-ம் தேதி செங்​கல்​பட்டு கிழக்கு மாவட்​டம், திருப்​போரூர் சட்​டப்​பேரவை தொகு​தி​யில் மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம் எழுச்சி பயணம் மேற்​கொள்ள உள்​ளார்.

திருப்​போரூர் அடுத்த மாமல்​லபுரம் சாலை​யில் தண்​டலம் பகு​தி​யில் அமைந்​துள்ள சுமார் ஐந்து ஏக்​கர் பரப்​பள​விலான இடத்​தில் மேடை அமைக்​கப்பட உள்​ளது . அ.தி.​மு.க. பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி வரவேற்​பது குறித்​தும், அரங்க அமைக்​கப்பட உள்ள இடத்​தை​யும் மாவட்ட செய​லா​ளர் திருக்​கழுக்​குன்​றம் எஸ்​. ஆறு​முகம் தலை​மை​யில் அ.தி​.மு.க​.வினர் நேரில் பார்​வை​யிட்டு ஆய்வு செய்து ஆலோ​சனை மேற்​கொண்​டனர். அப்​போது, அனைத்​துலக எம்.​ஜி.ஆர் மன்ற இணைச் செய​லா​ளர் முன்​னாள் எம்​.எல்.ஏ. கே.எஸ்​.சீனி​வாசன் , மாவட்ட அம்மா பேரவை செய​லா​ளர் ஆனூர் வி. பக்​தவச்​சலம் உள்​ளிட்ட பலர் உடன்​ இருந்​தனர்​.