மதுரை, செப். 29-

முதலமைச்சராக பதவி ஏற்ற பின்பு முதன் முறையாக ஜோசப் விஜய் மதுரைக்கு வருகை புரிந்தார். மதுரை விமான நிலையத்திற்கு காலை 11 மணிக்கு வந்தார். மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்பு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர்.

தமிழக அரசு சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தாய்-சேய் நல வார்டில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தொண்டர்கள் வழி நெடுக வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மதுரை விமான நிலையத்திலிருந்து பெருங்குடி விரகனூர் ரிங் ரோடு சாலை , சிந்தாமணி சாலை மற்றும் வைகை தென்கரையோர சாலை, அண்ணா நகர், ஆவின் சந்திப்பு, பனகல் சாலை வழியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கலந்தாய்வு கூட்டரங்கு மேடைக்கு வந்தார்.

முதலமைச்சரை மக்கள்நல்வாழ்வு சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர் 12.30 மணியளவில் விழா மேடையில் 30 குழந்தை

களின் தாய்மார்களுக்கு முதலமைச்சர் விஜய் தங்க மோதிரங்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் இரட்டை குழந்தைகளின் தாயார் ஒருவருக்கும் தங்க மோதிரங்கள் வழங்கினார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா நடைபெறக்கூடிய மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முழுவதிலும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து விழாவை முடித்து

க்கொண்டு பனகல் சாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை வழியாக காந்தி அருங்காட்சி

யகத்திற்கு மதியம் சென்று புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை மக்களின் பயன்பாட்டி

ற்காக திறந்து வைத்தார். பின்னர் காந்தி அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படங்கள், அவர் அணிந்திருந்த துணிகள், பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள் ஆகியவற்றை பார்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து அழகர்கோவில் சாலையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகையில் மதிய உணவுக்கு சென்றார். பின்னர் ஓய்வெடுத்து மாலை 4 மணிக்கு மேல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதுரை விமான நிலையம் முதல் கோரிப்பாளையம், மீனாட்சியம்மன் கோவில். வரை 16 கிலோ மீட்டர் சாலைகளின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன மழை நீர் வடிகால் செல்லும் பகுதிகளில் மரத்தினால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தொண்டர்கள் வரிசையில் நின்று பார்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதலமைச்சர் வரவேற்கும் விதமாக தவெக சார்பில் ஆங்காங்கே விளம்பர பேனர்கள் மற்றும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் நிற்கும் பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக குடிநீர் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டி

ருந்தன. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 2500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

முதல்வர் விஜய், வழியில் மீனாட்சி அம்மன் வேடத்தில் வரவேற்பு அளித்த குழந்தையை எடுத்து கொஞ்சினார். அரசு மருத்துவமனையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை அவர் துவக்கி வைக்கிறார். அங்கிருந்து ரூ.10 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ள காந்தி மியூசியத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். இந்நிகழ்ச்சி முடிந்ததும் அரசு சுற்றுலா மாளிகை செல்கிறார்.

மதிய உணவு, ஓய்வுக்குப்பின் மாலை 5:00 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்கிறார். பின் அங்கிருந்து விமான நிலையம் சென்று சென்னை புறப்படுகிறார்.

முதல்வர் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பும், விமான நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை வரை சாலையின் இருபுறமும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.