தனது தந்தையும் நடிகருமான சிவகுமாருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய தமிழக அரசுக்கு நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
கலை மற்றும் சமூகத்திற்கு என் தந்தை ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கும் தமிழக அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக் கழகம் சார்பில் நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துரு உள்ளிட்டோருக்கு மதிப்புமிக்க டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை வழங்கினார்.