தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் வரும் 19-ம் தேதி தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் மகளிர் மேம்ப்பாட்டுக்கென தொடர்ச்சியான திட்டங்களை வகுத்து வரும் தமிழக முதல்வர் தலைமையில், கடந்த 29.12.2025 அன்று திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில், வெல்லும் தமிழ்ப் பெண்கள் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு கறுப்பு சிகப்பு மகளிர் அணி படையின் மாபெரும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடைபெற்றதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றிட, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, முனைவர் க.பொன்முடி திருச்சி சிவா, எம்.பி., ஆ.ராசா, எம்.பி., அந்தியூர் ப.செல்வராஜ், எம்.பி., மு.பெ.சாமிநாதன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மகளிர் அணித் தலைவர் விஜயா தாயன்பன், மகளிர் அணிச் செயலாளர் ஹெலன் டேவிட்சன், மகளிர் தொண்டர் அணிச் செயலாளர் நாமக்கல் ப.இராணி ஆகியோர் பங்கேற்பில் வருகிற 19.01.2026 திங்கட்கிழமை, மாலை 4.00 மணி அளவில், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெற உள்ளது.

பொறுப்பாளர்களான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ்.ரகுபதி, சி.வி.கணேசன், பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ., காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., க.வைரமணி, க.அன்பழகன் எம்.எல்.ஏ., வீ.ஜெகதீசன், நிவேதா முருகன், எம்.எல்ஏ கே.கே.செல்லபாண்டியன், என்.கவுதமன், டி.பழனிவேல் அமைச்சர் பெருமக்களான கோவி.செழியன், சிவ வீ.மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா – நாடாளுமன்ற உறுப்பினர்களான அருண்நேரு, எம்.பி., முரசொலி, எம்.பி., மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இம்மாநாட்டினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்வார்கள். நிறைவாக, தஞ்சாவூர் மத்திய மாவட்டச் செயலாளர் திரு.துரை.சந்திரசேகரன், எம்.எல்.ஏ., நன்றியுரையாற்றுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.