மதுரை, அக். 11-

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு வழக்கில் ஓரிரு வாரங்களில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், விசாரணை மந்தமாக நடப்பதால் ஏற்படுத்தப்போவதில்லை வழக்கில் எந்த மாற்றத்தையும் என்று கூறப்படுகிறது.

மதுரை மாநகரில் சொத்து வரி நிர்ணயம் செய்ததில் தொடர்பாக மாநகராட்சி ரூ.1.50 கோடி வரை முறைகேடு நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸார் விசாரித்தனர். விசாரணை கிடப்பில் போடப்பட்ட நிலையில் மாநகராட்சி ஆணையராக வந்த சித்ரா, இந்த முறைகேட்டை விசாரிக்க போலீஸாருக்கு அனுமதி அளித்தார்.

கடந்த 2025 ஜூன் 17-ல் மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்ததோடு தனிப்படையினர் விசாரித்தனர். இந்த வழக்கில் பில் கலெக்டர்கள் உள்பட 19 பேரை ஆணையராக இருந்த சித்ரா சஸ்பெண்ட் செய்தார். இதில் தொடர்புடைய அதிகாரிகள், ஊழியர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், திமுக மண்டலத்மீண்டும் தலைவர்கள் 5 பேர், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவி விலகினர்.

இந்நிலையில் சொத்து வரி முறைகேடு வழக்கில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து மேயர் இந்திராணி தி.முக. தலைமையின் உத்தரவின்படி மேயர் பதவியை ராஜினாமா பாது செய்தார். அதன்பிறகு தற்போது வரை மேயர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்ததால் துணை மேயர் மேயர் நாகராஜன்தான் பொறுப்பு மேயராக இருந்து வருகிறார்.

சொத்துவரி முறைகேடு வழக்கை முறையாக விசாரித்து தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, மதுரை சரக டிஐஜி அபினவ்குமார்தலைமையில் உதவி காவல் ஆணையர் வினோதினி உள்ளிட்ட போலீஸ் குழு விசாரிக்கிறது.

சட்டப்பேரவை தேர்தலால் விசாரணை சற்று தொய்வாக இருந்தது. மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதிலும் தாமதம் ஏற்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணை மும்முரமாக நடப்பதாகக் கூறப் நிலையில், ஓரிரு வாரங்களில் மீண்டும் வேகமெடுத்துள்ள குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், டிஐஜிதலைமையிலான சிறப்புக் குழுவின் விசாரணைக்குப் பிறகு வரிநிர்ணய முறைகேடு வழக்கில் பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டன. சில அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட்டனர். இருப்பினும், விசாரணையில் இதுவரை கிடைத்த தரவு, ஆவணங்கள் மூலம் இன்னும் ஓரிரு வாரங்களில் குற்றப்பத்திரிகை தயாராகிவிடும். கைது செய்யப்படாத சிலபேர் இன்னும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படாமல் உள்ளனர். அவர்கள் தற்போது பணியில் உள்ளனர். மேலும் பொறுப்பு அதிகாரியாக இருந்தவர்கள் இதில் சிக்குவார்கள் என்று தெரிகிறது. மேலும் வேறு யாருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருந்தாலும் அவர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படுவர், என்றார்.