சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து இன்று முதல் இது மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த சவாரிகளான பொலிகர், மாபில்லார்ட் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சென்னை வொண்டர்லா எனும் பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்னணி பொழுதுபோக்கு பூங்காவான வொண்டர்லா ஹைதராபாத், கொச்சி, பெங்களூர், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த பூங்கா தமிழகத்தில் இல்லை என்றாலும் பெங்களூருக்கு தமிழக இளைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் படையெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில்தான் சென்னையில் வொண்டர்லா அமைக்கப்படும் என சொல்லப்பட்ட நிலையில் செங்கல்பட்டில் அமைத்து வருகிறது. இது தமிழகத்தின் முதல் வொண்டர்லா பொதுபோக்கு பூங்காவாகும். செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூரை அடுத்த இள்ளளூரில் 65 ஏக்கர் பரப்பில் இந்த பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ 611 கோடி செலவிடப்பட்டுள்ளது.

லண்டன், நியூயார்க் போன்ற நகரங்களில் உள்ள ரோலர் கோஸ்டர் போன்ற ஒரு பிரம்மாண்ட ரோலர் கோஸ்டர் செங்கல்பட்டில் அமைகிறது. இதற்கு மட்டும் 75 முதல் 80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம். மேலும் இன்வெர்ட்டர்ட் கோஸ்டர் தஞ்சோரா, ஸ்பின் மில், ஸ்கை ரயில் உள்ளிட்ட சவாரிகளும் உள்ளன.