அ.தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம் நாளை 31-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்,
சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில், நாளை 31-ம் தேதி காலை மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்க உள்ளது. மாவட்டச் செயலர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர்., எனும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு பின், பட்டியலில் இருந்து 97 லட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் விண்ணப்பிக்க ஜனவரி 18-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசிக்கவே மாவட்டச் செயலர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.