கோவை, அக். 18-

கோவையில் பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவில் இனிப்புகள் வழங்கி திமுக”வினர் கொண்டாட்டத்தில் ஈடுப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை காந்திபுரத்தில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஏழு தளங்க

ளுடன் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் தமிழக முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். திமுக ஆட்சிக் காலத்தில், அப்போதைய முதல

மைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்ப

ட்டன. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், ஆட்சி மாற்றம் காரணமாக திமுக ஆட்சிக் காலத்தில் இதன் திறப்பு விழா நடைபெறவில்லை.

இந்நிலையில், பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார். முதல்வர் விஜயை பார்க்க அங்கு ஏராளமான மக்கள் கூட்டம் அலைமோதியது. மறுபக்கம் தி.மு.க. ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்ட திட்டம் என்று தி.மு.க.வினர் வலைதளங்களில் அதிகம் பேசி வந்தகர். அதே சமயம் இந்த அறிவுலகம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, கோவை காந்திபுரத்தில் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கித் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயர்களை உச்சரித்து முழக்கங்க

ளையும் எழுப்பினர். இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, திமுக கோவை மாவட்டத் தலைவர் துரை செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட பெரியார் அறிவுலகம், தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் திமுகவினர் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.