கோவை, அக். 17-
கோவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார்.
முதற்கட்டமாக ரூ.300 கோடி மதிப்பிலான பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார். அதோடு, ரூ.200 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள் மற்றும் முடிவடைந்த திட்டங்க
ளைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்காகத் தொடங்கி வைத்தார். இதற்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் நேற்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் விஜய் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
அதன் பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாகப் பெரியார் அறிவுலகத்திற்கு வருகை தந்தார் . இதற்காக சுமார் 13 கிலோமீட்டர் தூரம் சாலை மார்க்கமாகப் பயணித்தார். சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்க
ப்பட்டுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி
ருந்தன. பொதுமக்கள் சாலையின் இருபுறங்க
ளிலும் நின்று முதல்வரை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டி
ருந்தன. இந்நிலையில் காவல் துறை விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டி
ருந்தன. அந்த வகையில் காவல் துறையினர் இப்பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கோவை மாநகர காவல் ஆணையர் ரம்யா பாரதி தலைமையில் 2,000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட
னர்.
பெரியார் அறிவுலக வளாகத்திற்கு வரும் முதல்வர் விஜய், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையைத் திறந்து வைத்தார். அதன் பின்னர், பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்து, அங்குள்ள ஒவ்வொரு வளாகமாகச் சென்றுப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, வளாகத்தில் நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் விஜய், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முதல்வரின் வருகையை முன்னிட்டு, ஏராளமான ரசிகர்களும் தொண்டர்களும் அங்குக் குவிந்தனர். இருப்பினும் அவர்களில் அடையாள அட்டை வைத்திருப்ப
வர்கள் மட்டுமே வளா
கத்திற்குள் அனுமதிக்க
ப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சிகளில் முதல்வர் விஜய் கலந்து கொண்ட பிறகு, அவினாசி சாலையில் உள்ள காவல் பயிற்சி மைதானத்திற்குச் சென்றார்.