சென்னை, அக். 16-

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா கூட்டணி சார்பாக சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (15.10.2026) நடைபெற்றது.

சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் த.வெ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும், முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அந்த வகையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ‘தமிழ்நாட்டில் மட்டும் 97 லட்சத்து 37 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். இது ஒவ்வொரு தொகுதியிலும் நடந்திருக்கிறது. கொளத்தூர் தொகுதியில், அன்றைய முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதியில், ஒரு லட்சம் வாக்குகள் நீக்கம் செய்யப்பட்டிரு

க்கின்றன. தேர்தலுக்கு முன்பே இந்தத் தகவல் கிடைத்து, நான் அவருடைய கவனத்திற்கு இதை எடுத்துச் சென்றேன். அமைச்சர் சேகர் பாபுவிடமும் இதை எடுத்துச் சொன்னேன்.

யாரோ ஒரு பெண்மணி என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, ‘கொளத்தூரில் சதி நடக்கிறது. அன்றைய முதலமைச்சர் வெற்றி பெறுவது கடினம்’ என்று கூறினார். அவர் யார் என்பது இப்போது எனக்கு ஞாபகம் இல்லை. முதலில் அதை நான் அலட்சியப்படுத்தினேன். இரண்டாவது முறை, மூன்றாவது முறை அவர் சொல்லும்போது, இதை நான் நேரடியாகச் சென்று முதலமைச்சரிடம் சொல்ல முடியாது. ‘நீங்கள் வேண்டுமானால், நான் ஒருவரை அறிமுகப்படுத்துகிறேன். அமைச்சரிடம் பேசுங்கள்’ என்று கூறி, சேகர்பாபுவுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்தேன். அந்தப் பெண்மணி சேகர் பாபுவிடம் பேசினார். அவர் நேரில் வரச் சொல்லிப் பேசினார். அதன் பிறகு எனக்கும் அன்றைய முதலமைச்சரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது நான், ‘அண்ணே, கொளத்தூரில் இந்த மாதிரியான ஒரு பிரச்சினை இருப்பதாகச் சொல்கிறார்கள். நீங்கள் இதைக் கவனிக்காமல் இருக்கக்கூடாது. சேகர் பாபுவிடமும் இதைச் சொல்லியிருக்கிறேன்’ என்று அவரிடம் கூறினேன். அப்போது அவர், ‘அதெல்லாம் ஒன்றும் இல்லைங்க. எஸ்ஐஆர் நடைமுறையில் நாம் பிஎல்ஏக்களை நியமித்து, சரியாகவும் முழுமையாகவும் பணிகளைச் செய்துகொண்டி

ருக்கிறோம். அப்படி எதுவும் நடக்கவில்லை’ என்று கூறினார். தேர்தல் நடப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்பே இந்த எச்சரிக்கை நம்முடைய கவனத்திற்கு வந்தது. அதைச் சொல்வதற்காகத்தான் நான் இதைக் கூறுகிறேன்.

யார் மீதும் குற்றச்சாட்டுச் சொல்வதற்காக அல்ல. குற்றச்சாட்டு நோக்கில் நான் இதைச் சொல்லவில்லை. எச்சரிக்கை செய்வதற்காக அன்றைய முதலமைச்சரிடமே நேரில் சொன்னேன். ‘உங்களைக் குறிவைப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்’ என்று கூறினேன். சேகர் பாபுவிடமும் மறுபடியும் இதுகுறித்துப் பேசினேன். ‘இல்லை, அவர்கள் சொன்னபடி எல்லாவற்றையும் முழுமையாகச் சரிபார்த்துவிட்டேன். எந்தப் பிரச்சினையும் இல்லை’ என்றுதான் அவர் கூறினார். ஆனால், ஒரு லட்சத்திற்கும் மேலான வாக்காளர்கள் அங்கே நீக்கம் செய்யப்பட்டி

ருக்கிறார்கள். அவர்களில் இறந்துபோனவர்கள் 20 ஆயிரம் பேர். எஞ்சியவர்கள் ‘ஷிப்டட்’ என்ற பெயரிலும், ‘டூப்ளிகேஷன்’ என்ற பெயரிலும் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வாக்காளர்கள் குறிவைக்க

ப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு’ எனத் தெரிவித்தார்.