தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ராக முலான்​பூரில் நடை​பெற்ற 2-வது டி20 கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி 51 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​தது. பெரிய அளவி​லான இலக்கை துரத்​திய நிலை​யில் ஷுப்​மன் கில்​லும், சூர்​யகு​மார் யாத​வும் எந்​த​வித தாக்​கத்​தை​யும் ஏற்​படுத்​தாதது அணிக்கு அழுத்​தத்தை அதி​கரித்​தது. இவர்​கள் இரு​வரிடம் இருந்து சர்​வ​தேச டி20 போட்​டிகளில் கடந்த ஓராண்டு கால​மாகவே பெரிய அளவி​லான மட்டை வீச்சு வெளிப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில் தென் ஆப்​பிரிக்க அணிக்கு எதி​ரான 2-வது டி20 ஆட்​டத்​தில் 51 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்த பின்​னர் இந்​திய அணி​யின் துணை பயிற்​சி​யாள​ரான டென் டாஷேட் கூறிய​தாவது:

கடந்த நவம்​பர் மாதம் நடை​பெற்ற ஆஸ்​திரேலிய தொடருக்கு பின்​னர் ஷுப்​மன் கில்​லின் மனநிலை​யில் சிறந்த மாற்​றத்தை கண்​டோம். தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதி​ரான தற்​போதைய டி20 தொடரில் முதல் இரு ஆட்​டங்​களில் அவர், எளி​தாக ஆட்​ட​மிழந்​தார். முதல் போட்​டி​யில் பவர்​பிளே​வில் அதிரடி​யாக விளை​யாடு​மாறு நாங்​கள்​தான் கூறி​யிருந்​தோம்.

அந்த போட்டி நடை​பெற்ற கட்​டாக் ஆடு​களம் சிறப்​பானது இல்​லை. இதனால் அந்த ஆட்​டத்தை விட்​டு​விடலாம். 2-வது போட்​டி​யில் ஷுப்​மன் கில் சிறந்த பந்​தில் ஆட்​ட​மிழந்​தார். பார்​மில் தேக்​கம் அடை​யும் போது இது நிகழும். கில்​லின் பேட்​டிங் தரம் எங்​களுக்கு தெரி​யும். அவருடைய ஐபிஎல் சாதனையைப் பார்த்​தால் சீசனுக்கு 700 ரன்​கள், 600 ரன்​கள், 800 ரன்​கள், 600 ரன்​கள் என குவித்​துள்​ளார். அதனால் அவர், மீண்​டும் பார்​முக்கு திரும்​பு​வார் என்று நாங்​கள் நம்​பு​கிறோம். சூர்​யகு​மார் யாத​வும், ஷுப்​மன் கில்​லும் சரி​யான நேரத்​தில் மீண்டு வரு​வார்​கள் என்​ப​தில்​ எனக்​கு முழு​மை​யான நம்​பிக்​கை உள்​ளது. இவ்​வாறு அவர்​ கூறினார்.