ஈரோடு, அக். 16-
தவெக ஆட்சியில் புதிய பணிகளுக்கு கார்ப்ரேட் நிறுவனத்திற்கு மட்டும் ரூ.18 ஆயிரம் கோடிக்கு டெண்டர், ஏற்கனவே முடித்த பணிகளுக்கு ஒப்பந்தாரர்களுக்கு 80 சதவீதம் வரை நிதி வழங்காமல் உள்ளதாக ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈரோட்டில் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தின் கோவை மண்டல கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் கார்மேகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:தமிழ்நாட்டில் ஒப்பந்ததாரர்களுக்கு நிதிகளை விடுவிக்காததால் கடந்த 4 மாதங்களில் கடுமையான மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.
கட்டுமான பொருட்க
ளின் விலை 40 முதல் 70% உயர்ந்துள்ளது. ரூ.10 கோடிக்கு மேல் உள்ள பணிகளுக்கு ஆன்லைன் டெண்டரை பெரிய கார்ப்ரேட் நிறுவனங்க
ளுக்கும், ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சத்திற்கும் மேற்பட்ட பணிகளை சிறிய ஒப்பந்ததாரர்களுக்கு ஆப்லைன் டெண்டர் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய அரசு அமைந்ததில் இருந்து ஏற்கனவே முடித்த ஒப்பந்த பணிகளுக்கு தற்போது வரை 80 சதவீதம் வரை நிதி வழங்கவில்லை. கடந்த திமுக மற்றும் அதிமுக ஆட்சியிலும் 40 நாளுக்குள் தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் உடன்தான் நிதியை வழங்கினர். இந்த ஆட்சியில் தற்போது, தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் தாமதம் செய்து, நிதியை நிறுத்தி வைத்துள்ளனர்.
பொதுப்பணித்துறை அமைச்சரை 5 முறை பார்த்தும் கோரிக்கை அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. டாடா, எல் அண்ட் டி போன்ற கம்பெனிகளுக்கு மட்டுமே டெண்டர் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் நினைக்கிறார். புதிய அரசு அமைந்த உடன், எல் அண்ட் டி நிறுவனத்திற்கு மட்டும் ரூ.18 ஆயிரம் கோடிக்கு டெண்டர் வழங்கப்ப
ட்டுள்ளது. இதனால், 38 மாவட்டங்களில் இருக்கும் ஒப்பந்ததாரர்கள் பாதிக்கப்பட்டு, வெளியே தான் நின்று கொண்டிருக்கிறோம். தவெக அரசு கடந்த ஆட்சியாளர்கள், கட்சி நிதி வாங்கினார்கள் என மட்டும் என குற்றம்சாட்டி பேசி வருவதால், கடந்த 4 மாதமாக தமிழ்நாட்டில் வளர்ச்சி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
போர்க்கால அடிப்படையில் நடக்கும் பணிகளுக்கு ஆப்லைன் (நேரடி) டெண்டர் வழங்க வேண்டும். புதிய ஆட்சி அமைந்ததில் இருந்து ஒப்பந்ததாரர்களுக்கு எவ்வித ஒப்பந்த பணிகளும் வழங்காததால் நாங்கள் பூஜ்ஜியத்தில் இருக்கிறோம். ஒப்பந்ததாரர்களை முறையாக அழைத்து கருத்துக்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து, நிறைவேற்ற வேண்டும். கோரிக்கை ஏற்காவிட்டால் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் சென்னை அல்லது சேலத்தில் நடத்த உள்ளோம். மேலும், மாநில தழுவிய வேலை நிறுத்த போராட்டமும் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.