கடந்த 2012-ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் கும்கி. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து கும்கி 2 படத்தை பிரபு சாலமன் இயக்கி இருந்தார். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டு இருந்தது.

கும்கி 2 படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த மாதம் 14-ம் தேதி வெளியான கும்கி 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில், கும்கி 2 படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாவது குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, கும்கி 2 படம் ஜனவரி 3-ம் தேதி பிரைம் வீடியோ ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.