மேட்டூர், அக். 18-

மேட்டூர் நகராட்சியில், 134 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணிபுரி

கின்றனர்.

அவர்கள், பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; பி.எப்., பிடிப்பதில் நடக்கும் நிதி மோசடியை தடுத்தல்; தீபாவளி போனஸ், 8.33 சதவீதம் வழங்குதல்; தினமும் காலை உணவுப்படி, 100 ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 5ல், நகராட்சி அலுவலகம் முன் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். 3 நாட்களுக்கு பின், மேட்டூர் பஸ் ஸ்டாண்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற

னர்.அப்போது நகராட்சி கமிஷனர் சபாநாயகம் பேச்சு நடத்தி, அக்., 15க்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதனால் துாய்மை பணியாளர்கள் பணிக்கு திரும்பினர். ஆனால் நேற்று முன்தினம் மாலை வரை, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.