சென்னை மெரினா கடற்கரை அருகே வீடற்றவர்களுக்கான இரவு நேர காப்பகத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது, எஸ்.ஐ.ஆர் பணிகளுக்குப் பிறகு எதிர்பார்த்ததை போலவே எதிர்பார்த்ததை விட அதிக வாக்காளர்களை நீக்கியுள்ளனர். 97 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினா அண்ணா பூங்கா அருகே 86 பேர் தங்கும் வகையில் 2,500 சதுரஅடி பரப்பில் இரவு நேர காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 86.40 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இரவு நேர காப்பகத்தில் குடிநீர், மின்விசிறி, கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்தக் காப்பகத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இவ்விழாவில் பங்கேற்று, இரவு நேர காப்பகத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது,

மெரினா கடற்கரையில் வீடற்றவர்களுக்கு இரவு நேர காப்பகம் திறக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் வீடற்றவர்களுக்கு இரவு நேர காப்பகம் திறக்கப்படும். பிற இடங்களிலும் தேவையைப் பொருத்து திறக்கப்படும். ஆரம்பத்தில் இருந்தே எஸ்.ஐ.ஆர் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறோம். காலஅவகாசம் பத்தாது என்று கூறியுள்ளோம். பல மாநிலங்களில் முக்கியமாக பீகாரில் எஸ்.ஐ.ஆர் வைத்து யார் யாருடைய வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தெளிவாகக் கூறியுள்ளார். எதிர்பார்த்ததை போலவே எதிர்பார்த்ததை விட அதிக வாக்காளர்களை நீக்கியுள்ளனர். 97 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. எங்கள் தலைவர் கட்சி நிர்வாகிகளுக்கு தெளிவாக அறிவுறுத்தல்கள் வழங்கியிருக்கிறார்கள். நீக்கப்பட்ட வாங்குகள், விடுபட்டு போனவர்கள், யார், யார் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றனர்.