திருப்புவனம், அக். 18-
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடையில் காப்பர் குழாய்கள் திருடப்பட்டதால் உடல்களை எரிக்க விறகு பயன்படுத்தப்படுகிறது.
திருப்புவனம் பேரூராட்சிக்குட்பட்ட நெல்முடிகரை எரிவாயு மயானத்தில் உடல்களை எரிக்க ரூ. 7 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படு
கிறது. மயான அறையின் இரு புறமும் ஆறு காஸ் சிலிண்டர்கள் வைக்க
ப்பட்டிருக்கும். அங்கிருந்து குழாய் மூலம் தகன மேடையின் இரு புறமும் உள்ள பர்னர்களுக்கு காஸ் செல்லும். நேற்று திருப்புவனத்தில் இறந்த ஒருவரின் உடலை எரியூட்ட கொண்டு வந்தனர். தகன மேடை மீது வைத்து எரியூட்ட எரிவாயு சிலிண்டரை திறந்தபோது தகன மேடையில் உள்ள உடலுக்கு காஸ் செல்லாமல் மயான அறை முழுவதும் பரவியது.
தொழிலாளர்கள் சென்று பார்த்த போது தான் காஸ் செல்லும் காப்பர் குழாய் திருடப்பட்டது தெரிய வந்தது. இதை அறிந்த உறவினர்கள் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் பாண்டியனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
உடலை மீண்டும் வெளியே எடுத்து வந்து விறகுகள் அடுக்கி எரியூட்ட ஊழியர்கள் முடிவு செய்தனர். ஆனால் உறவி
னர்கள் ஒரு முறை இறக்கி தீ பற்ற வைத்த உடலை மீண்டும் துாக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து எரிவாயு தகன மேடையின் கீழ்பகுதி
யில் விறகுகள் அடுக்கி வைத்து மீண்டும் எரியூட்டி
னர்.