அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உடல்நிலை பற்றி பல்வேறு விவாதங்களும் எழுந்துவரும் நிலையில். தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகைக்கு அதிபர் டிப் அளித்துள்ள பேட்டியில் தனது உடல்நிலை பற்றி தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நிலையில் டிரம்ப் அளித்த தொலைபேசி பேட்டி வருமாறு, என உடல்நிலை சீராக உள்ளது. நான் தினமும் 325 மில்லி கிராம் அளவிலான ஆஸ்பிரின் மாத்திரையை உட்கொள்கிறேன். சிலர் அது அதிகம் என்கிறார்கள். நான் மருத்துவர் பரிந்துரையின்படியே அதனை எடுக்கிறேன். அதை எடுக்காவிட்டால் ரத்தம் அடர்த்தி மிகுமாம். எனக்கு எனது இதயத்துக்குள் நல்ல மெலிதான ரத்தமே செல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதனால் ஆஸ்பிரின் எடுக்கிறேன். நான் நீண்ட கால பழக்கங்களைக் கைவிட விரும்பவதில்லை. எனக்கு கொஞ்சம் மூடநம்பிக்கை அதிகம்.

எனக்கு உடற்பயிற்சிகளில் எல்லாம் ஈடுபாடு இல்லை. நான் செய்யும் ஒரே ஒரு உடற்பயிற்சி கோல்ப் விளையாடுவது தான். நான் ஆஸ்பிரின் அதிகம் எடுப்பதால் உடலில் எங்காவது எப்போதாவது சில சிராய்ப்புகள் போல் காட்சியளிக்கலாம். அதை மறைக்க மேக் அப் போடப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆம், நான் என்னுடன் மேக் அப் கிட் எடுத்துச் செல்கிறேன். அது வெறும் 10 நொடிகளில் சிறப்பான ஒப்பனையை தரக் கூடியது.மேலும், நான் நீண்ட நேரம் நடைபெறும் பொது நிகழ்ச்சிகளில் தூங்கிவிடுவதாக எனது புகைப்படத்தைப் பகிர்ந்து விமர்சிக்கின்றனர். ஆனால் நான் தூங்கவில்லை. நான் கண் சிமிட்டும் நேரம் படம் எடுத்து நான் தூங்குவதாக சொல்கின்றனர். நான் இரவில் கூட வெகு நேரம் தூங்குவதில்லை என்று தெரிவித்துள்ளார்.