ஈரோடு, அக். 10-

ஈரோட்டில் பொது மயானத்தில் உடலை அடக்கம் செய்த விவகாரத்தில் மாற்று சமூகத்தினர் காலில் பட்டியலின மக்களை விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி

யுள்ளது.

பெருந்துறை அருகே உள்ள திங்களூர் பெரும்பாளி பகுதியில், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த சென்னி என்பவர் கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தார். அவரது உடலைப் பெரும்பாளி பகுதியில் உள்ள பொது மயானத்தில் அடக்கம் செய்ய முயன்றபோது, மாற்றுச் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர், அது பொது மயானம் தான் என்பதை உறுதிப்படுத்தி உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாற்றுச் சமூகத்தினர், தங்கள் எதிர்ப்பையும் மீறி உடலை அடக்கம் செய்த

தால், பட்டியலினத்தவர்கள் இனி எங்கள் வேலைக்கு வரக்கூடாது என தெரி

வித்ததாக கூறப்படுகிறது.

தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்ற அச்சத்தில், பட்டியலின மக்கள் மாற்றுச் சமூகத்தினரின் காலில் விழுந்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. போலீசார், அதிகாரிகள் முன்னிலையில் பட்டியலின மக்கள் மாற்றுச் சமூகத்தி

னரின் காலில் விழுந்திருக்கி

ன்றனர். இச்சம்பவம் குறித்து பெருந்துறை வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், திங்களூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.