மதுரை, அக்.2-
மதுரை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரையில் இன்று (அக். 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மதுபானம் விற்பனை செய்யக் கூடாது . இதையடுத்து, தமிழ்நாடு மதுபான சில்லறை மற்றும் தமிழ்நாடு மதுபான விதிகளின் கீழ் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், பாா்கள், உரிமம் பெற்ற கிளப் பாா்கள், உரிமம் பெற்ற ஹோட்டல் பாா்கள், உரிமம் பெற்ற மதுபான விற்பனையகங்கள், மதுபானக் கூடங்கள் என அனைத்தும் இன்று மூடப்பட வேண்டும். இந்த அறிவிப்பை மீறி மது விற்றால், மது விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.