ராமர் கோயி​ல் அமைந்துள்ள அயோத்​தியை சர்​வ​தேச தரத்​தில் உயர்த்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​நகரில் கோயில் அருங்​காட்​சி​யகம் அமைக்க கடந்த வருடம் செப்​டம்​பர் 3-ல் மத்​திய அரசு, உ.பி. அரசு மற்​றும் டாடா சன்ஸ் நிறு​வனம் இடையே முத்​தரப்பு ஒப்​பந்​தம் கையெழுத்தானது. இதற்​காக அயோத்​தி​யின் மஞ்சா ஜம்​தாரா கிராமத்​தில் 25 ஏக்​கர் நசுல் நிலம் 90 ஆண்​டு​கள் குத்​தகைக்கு வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் அருங்​காட்​சி​யகத்தை சர்​வ​தேச தரத்​தில் பிரம்​மாண்​ட​மாக கட்ட டாடா சன்ஸ் கூடு​தல் நிலம் கோரியது. இதை ஏற்ற உ.பி. அரசு கூடு​தலாக 27.102 ஏக்​கர் சேர்த்​து, மொத்​தம் 52.102 ஏக்​கர் நிலத்தை ஒதுக்க முடிவு செய்​துள்​ளது. இதற்​கான ஒப்​புதலை முதல்​வர் ஆதித்​ய​நாத் தலை​மையி​லான அமைச்​சரவை அளித்​தது.

அயோத்​தியை சர்​வ​தேச கலாச்​சார மற்​றும் ஆன்​மிக தலமாக மேம்​படுத்​தும் ஒரு பெரிய திட்டத்துக்கு முதல்​வர் யோகி அரசு இதன்​மூலம் அடித்​தளம் அமைத்​துள்​ளது. டாடா சன்ஸ் தனது சிஎஸ்​ஆர் நிதி​யைப் பயன்​படுத்தி அதிநவீன முறை​யில் இந்த கோயில் அருங்​காட்​சி​யகத்தை உருவாக்​கி, இயக்​கும் பொறுப்பை ஏற்​றுள்​ளது. இதன் மூலம் அயோத்​திக்கு ஒரு புதிய கலாச்​சார அடை​யாளம் கிடைப்​பதுடன், நேரடி மற்​றும் மறை​முக வேலை​வாய்ப்​பு​களும் உரு​வாக உள்​ளது. இந்த திட்​டம் அயோத்​தி​யின் சுற்​றுலா வளர்ச்​சியை மேம்​படுத்​து​வ​தி​லும் முக்​கியப் பங்கு வகிக்கும்.