உத்தரப்பிரதேசம் அயோத்தியில் எஸ்.ஐ.ஆர். பதிவு, ஆன்மிக மயமாக உருவெடுக்கிறது. இங்குள்ள துறவிகள் தம் தாயின் பெயராக சீதை, ஜானகி, கவுல்சயா உள்ளிட்ட கடவுள்களின் பெயர்களை குறிப்பிடுகிறனர்.

மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் சிறப்பு திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) உபியிலும் தொடர்கிறது. இதற்கானப் படிவங்களில் வாக்காளர்கள் தம் தாயின் பெயராக இந்துக்களால் வணங்கப்படும் பெண் கடவுள்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறனர். இதில், சீதை, ஜானகி, கவுசல்யா மற்றும் சுமித்ரா ஆகியோரில் ஒரு பெயரை தம் தாயாகக் குறிப்பிடுகின்றனர். தந்தையின் பெயராக இந்த துறவிகள் தமது குருக்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து அயோத்தியின் மூத்த துறவிகளில் ஒருவரான முனைவர்.ராம் விலாஸ் வேதாந்தி கூறுகையில், சிறுவயது முதல் அயோத்தியில் வாழும் பெரும்பாலான துறவிகள் பொதுக் கல்வியறிவு இல்லாதவர்கள். இவர்களுக்கு தம் பெற்றோரின் பெயர்கள் தெரியாது. தமது ஆன்மிகக் குருக்களின் பெயர்களை மட்டுமே அவர்கள் அறிவர். இவர்களிடம் அவர்களது தாயின் பெயரைக் கேட்டால் சீதா மாதா, ஜானகி தேவி, சுபத்ரா மற்றும் கவுசல்யா தேவிகளின் பெயர்களைக் குறிப்பிடுவதும் வழக்கம்.

துறவியான பின் தந்தைக்கான இடத்தில் தமது குருவையே அவர்கள் குறிப்பிடுகின்றனர். இதில் எதையுமே அவர்கள் மறைக்காமல் மத்திய மற்றும் உபி அரசுகளுக்கு உதவுகின்றனர். இதை நான் முதல் நபராக எஸ்ஐஆர் விண்ணப்பத்தில் தந்தையாக குருவையும், தாயாக ஜானகி பெயரையும் குறிப்பிட்டது பலராலும் தொடர்கிறது எனத் தெரிவித்தார்.