கன்னியாகுமரி, அக். 16-

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கான பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

வடகிழக்குப் பருவம

ழையை முன்னிட்டு, நாகர்கோவில் மாநக

ராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மழைநீர் வடிகால் ஓடைகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, பறக்கின்கால்வாய் மற்றும் காங்கேயன் கால்வாய் பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மரியாதைக்குரிய பிரதாப் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின்போது, கால்வாய்களில் தேங்கியுள்ள மண் மற்றும் கழிவுகளை அகற்றி, மழைநீர் தடையின்றி வெளியேறுவதற்கு ஏதுவாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகா

ரிகளிடம் கேட்டறிந்தனர். மேலும், வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் மழைநீர் தேங்குவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், தூர்வாரும் பணிகளை விரைந்து முடி

க்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தினர்.

இந்த ஆய்வின்போது, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், நாகர்கோவில் மாநகராட்சி மாண்புமிகு மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி ஆணையர் மரியாதைக்குரிய ஐஸ்வர்யா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், தொடர்புடைய துறை அலுவலர்கள் உள்ளி

ட்டோர் கலந்து கொண்ட

னர்