புதுடெல்லி, அக். 17-
ராகுல் காந்தியும் அவரைச் சுற்றியுள்ள முழு சூழல் அமைப்பும் நாட்டில் குழப்பமான சூழலை உருவாக்குவதற்கு முயற்சிப்பதாக பாஜ குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லியில் செய்தியாள
ர்களிடம் பேசிய பாஜ செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, ‘’வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டம் தமக்கு ஊக்கமளித்த
தாகவும், வங்கதேசத்தில் நடந்தது போன்ற நிகழ்வுகள் இந்தியாவிலும் நடக்க வேண்டும் என்றும் நேஹா போரா ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
இவை நேஹா போரா
வின் வார்த்தைகளாக இருந்தாலும், உண்மையில் இவை ராகுல் காந்தியின் கருத்துக்களே. அவர்கள் இந்தியாவில் வங்கதேசத்தை போன்ற இளைஞர்களை உள்ளடக்கிய ஒரு போரா
ட்டத்தை உருவாக்குவதற்கு விரும்புகிறார்கள்.
நேஹா போராவின் கருத்துகளும், ராகுல்காந்தி சமீபத்தில் நடத்திய போராட்ட ஊர்வலத்தில் அவர் கலந்து கொண்டலும், காங்கிரஸ் தலைவர் தனது முழு சூழல் அமைப்போடு இணைந்து ஒரு சதி செய்வதை உறுதிப்படுகிறது. இது அரசியல் ரீதியான எதிர்ப்பு அல்ல. இது ஒரு குழப்பத்தை நோக்கிய ஊர்வலம் மற்றும் கலகம். இவர்களின் இலக்கு அரசாங்க மாற்றமே’’ என்றார்.