இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியே ரோஹித் ஷர்மாவின் கடைசி ஒருநாள் போட்டியாக இருக்க வாய்ப்பு என கூறப்படுகிறது. 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியை கருத்தில் கொண்டு ரோஹித் ஷர்மாவை அணியிலிருந்து விடுவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா (26, 11 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து, அவரது ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த கேள்விகள் பலமடைந்துள்ளன. 2027 ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து, 39 வயதான ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கூடுதல் வாய்ப்பளிக்க பிசிசிஐ தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூலை 19 அன்று நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியே ரோஹித்தின் கடைசிப் போட்டியாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து அணியை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தேர்வுக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த இங்கிலாந்து தொடருக்குப் பிறகு தங்களின் எதிர்காலத் திட்டங்களில் ரோஹித் இல்லை என்பதைத் தேர்வுக் குழுவினர் அவரிடம் தெரிவித்துவிட்டதாகவும், இதனால் ரோஹித் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரோஹித் ஷர்மாவை இந்திய அணியில் இருந்து விடுவிக்க பிசிசிஐ முடிவு?
July 17, 2026
விளையாட்டு
பொழுதுபோக்கு
Latest Posts
எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தில் பதிவான வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்யக்கோரி ஐகோர்ட்டில் மனு
தமிழகம்
October 17, 2026
சூரிய ஒளி மின் தகடுகளை நிறுவிய 5 நாள்களுக்குள் இணைப்பு வழங்கப்படும்- மின் வாரிய அதிகாரி தகவல்
தமிழகம்