மதுராந்தகம், அக்.1-
மதுராந்தகத்தை தொடர்ந்து தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்தியபா
மாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் வருகிற 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய், கடந்த வெள்ளிக்கிழமை பரப்புரை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, தவெக வேட்பாளர் சத்யபா
மாவை ஆதரித்து தாராபுரம் தொகுதியில் இன்று 3 மணியளவில் முதலமைச்சர் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்காக, தாராபுரம் உடுமலை சாலையில் சித்ராவுத்தன்பாளையம் கிராமம் அருகேயுள்ள மாருதி நகரில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பொதுக்கூட்ட அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிக்காக சின்டெக்ஸ் தொட்டிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
கூட்டத்தின் பின்புற
த்தில் இருப்பவர்களும் முதல்வர் விஜய்யை எளிதாக பார்க்கும் வகையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரைகள் வைக்கப்பட்டிருந்தன. பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதியில் சாலையின் இருபுறமும் பேரிகேடுகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதனிடையே, QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் வேறு யாருக்கும் அனுமதி கிடையாது எனவும் அமைச்சர் ஆனந்த் தெரிவித்திருந்தார். பாதுகாப்புக் கருதி, கர்ப்பிணிகள், சிறுவர் - சிறுமியர், பள்ளி மாணவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனா
ளிகள் உள்ளிட்டவர்களுக்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டி
ருந்தது.
தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் விஜய், சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை புறப்பட்டுச் ெசன்றார். விமான நிலையத்தில் இருந்து அவிநாசி சாலை வழியாக கருமத்தம்பட்டி மார்க்கமாக காரணம்பேட்டை சென்ற முதல்வர் விஜய், அங்கிருந்து பல்லடம் வழியாக தாராபுரம் சென்றார். முதலமைச்சர் வருகையையொட்டி கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்து, கார்கள் நீலாம்பூர் வழியாக வந்து பைபாஸ் சாலை வழியாகச் செல்ல அறிவுறுத்தப்ட்டிருந்தது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் நீலாம்பூர், சிந்தாமணிப்புதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் செல்லவும் அவிநாசி சாலை வழியாக வெளியேறும் வாகனங்கள் லட்சுமி மில்ஸ் பகுதியில் இருந்து திரும்பி புலியகுளம், ராமநாதபுரம், சிங்கா
நல்லூர் வழியாக செல்வதற்கும் அறிவுறுத்தப்
பட்டிருந்தது.
இதே போன்று, அவிநாசி சாலை, ஹோப்ஸ் வழியாக வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வருகையை யொட்டி விமான நிலைய பயணிகள் 30 நிமிடங்க
ளுக்கு முன்பாக வர அறிவுறுத்தப்பட்டிருந்தது.
விமான நிலைய வளாகத்தில் வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதி இல்லை. மேலும், கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டி
ருந்தது. இந்த நிலையில் முதல்வர் விஜய், வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்தும், எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தும் பிரசாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து திறந்த வேனில் கோவை சென்றார். அங்கிருந்து தனி விமா
னத்தில் சென்னை ென்றார்.