சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று (அக்.14) அறிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்ததாவது: பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 3-ல் தொடங்கி மார்ச் 29 வரை நடைபெறுகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே-7-ல் வெளியிடப்படுகிறது. பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி பிப்.26-ம் தேதிக்குள் 10-ம் வகுப்புக்கான செயல்முறைத் தேர்வு நடைபெறுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 17-ல் தொடங்கி ஏப்ரல் 12 வரை நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.20-ல் வெளியிடப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணை: தமிழ்: 17.03.2027, ஆங்கிலம்: 25.03.2027, கணிதம்: 31.03.2027, அறிவியல்: 05.04.2027, சமூக அறிவியல்: 09.04.2027, விருப்பப் பாடம்: 12.04.2027, 12-ம் வகுப்பு தேர்வு அட்டவணை: தமிழ்: 03.03.2027, ஆங்கிலம்: 08.03.2027, வேதியியல்: 12.03.2027, உயிரியல்: 19.03.2027, இயற்பியல்: 23.03.2027, கணிதம்: 29.03.2027, கணக்குப் பதிவியல்: 12.03.2027, கணினி அறிவியல்: 15.03.2027, வரலாறு: 19.03.2027, தாவரவியல்: 19.03.2027, பொருளியல்: 23.03.2027, விலங்கியல்: 29.03.2027 தேதிகளில் தேர்வு நடைபெறுகிறது என்று அமைச்சர் அறிவித்தார். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே.20-ம், பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 7-ம் தேதியும் வெளியாகிறது.