செங்கல்பட்டு, அக். 17-

மறைமலைநகரில் தற்காலிக பேருந்து நிலையத்தை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட

னர்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக, செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகள் எளிதாகப் பேருந்துகளில் ஏறிச் செல்லும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மறைமலை

நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தைத் தற்காலிக பேருந்து நிலையமாக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.விளையாட்டு மைதானத்தைப் பேருந்து நிலையமாகப் பயன்படுத்துவதால், பயிற்சி

களில் ஈடுபடுபவர்களுக்குப் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தற்காலிக பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே அங்கு வந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபனை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது

மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் பார்த்திபன், ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டி

கைக்கு பிறகு இந்த விளையாட்டு மைதானத்தில் இருந்து தற்காலிக பேருந்து நிலையம் அகற்றப்படும் என உறுதி அளித்தார். பின்னர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மறைமலைநகரில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்களிடம் அமைச்சர் பார்த்திபன் கூறுகையில், மறைமலைநகர் பேருந்து நிலையம் தற்காலிகம்தான். தற்போது சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இந்த விளையாட்டு மைதானத்தில் நிரந்தரமாக பேருந்து நிலையம் வருவதாக சிலர் புரளி கிளப்பிவிட்டு

ள்ளனர். அதை நம்பி பொதுமக்கள் போராட்ட

த்தில் ஈடுபட்டனர். மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு மழையில் நினையாதபடி நிழற்குடை, குடிநீர், கழிப்பறை என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.