மதுரை, அக். 16-

மதுரை மாநகராட்சியில் நடந்து முடித்த பணிகளுக்கு பணம் ஒதுக்கீடு செய்வ

தற்கான கோப்புகள் 6 மாதங்களுக்கும் மேல் இழுத்தடிக்கப்படுவதாக ஒப்பந்தாரரர்கள் சங்கங்கள் கமிஷனர் கவுரவ் குமாரிடம் புகார் அளித்தன.

மாநகராட்சியில் 200க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் உள்ளனர். இவர்கள் 2 ஆண்டுகளாக ரோடுகள், பேவர் பிளாக் அமைப்பு, அரசு திட்டங்கள் என பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். ஒப்பந்த பணிகள் முடிந்தும் ரூ.150 கோடிக்கும் மேலான பணம் மாநகராட்சியால் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து மாநகராட்சி பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் சங்கம், மாநகராட்சி அனைத்து ஒப்பந்ததாரர்கள் நலச் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கமிஷனர் கவுரவ் குமாரை நேற்று சந்தித்து முறையிட்டனர். அப்போது, ‘பல்வேறு பில்கள் மாமன்ற ஒப்புதல் பெறாமலே உள்ளன. கணக்கு பிரிவு அலுவலர்களை எப்போது சந்தித்தாலும் போர்டல் ஓபன் ஆகவில்லை. சர்வர் பிரச்னை எனக்கூறி எங்களை அலைக்கழிக்கி

ன்றனர். தீபாவளி நெருங்கு

வதால் மாநகராட்சி பணம் வழங்கினால் ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பங்கள் பண்டிகையை கொண்டாட முடியும்’ என்றனர்.

நிர்வாகிகள் கூறியதா

வது: இரண்டு ஆண்டுகளாக டூரிப், என்.எஸ்.எம்.டி., என்.என்.டி., உட்பட பேஸ் 1ல் 83 வேலைகளும், பேஸ் 2ல் 18 வேலைகளும் முடிக்கப்பட்டுள்ளன. இதற்காக ரூ.150 கோடிக்கும் மேல் மாநகராட்சி வழங்க வேண்டியுள்ளது. இதுதவிர பணிகள் நிறைவடைந்த பின் நாங்கள் அளித்த கூடுதல் வைப்புத் தொகையை திருப்ப வழங்க வேண்டும். அவ்வகையிலும் ரூ.10 கோடிக்கும் மேல் மாநகராட்சி நிலுவை வைத்துள்ளது. சில பணிகளுக்கு 90 சதவீதமும் தொகை வழங்கப்பட்டு

ள்ளது. பல பணிகளுக்கு 10 சதவீதம் தொகை நிலுவையில் உள்ளது.

பொதுநிதி, வாட்டர் சப்பளை பணிகள் சார்ந்த கோப்புகளும் நிலுவையில் உள்ளன. கமிஷனரிடம் முறையிட்டோம். ‘அக். 21க்குள் காசோலைகள் வழங்கப்படும்’ என அவர் உறுதியளித்துள்ளார். அவ்வாறு வழங்க

வில்லையென்றால் சங்க நிர்வாகிகள் ஆலோசித்து அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றனர்.