மதுரை: நாகமலை புதுக்கோட்டையில் உள்ள என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில், ரோட்டராக்ட் கிளப் ஆஃப் என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி நிர்வாகிகள் பதவியேற்பு விழா செப்டம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது.
விழாவில் என்.எம்.எஸ்.எஸ். வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி தலைவர் ரோட்டேரியன் மேஜர் டோனர் ஏ. கோடீஸ்வரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். CAN HR இயக்குநர் ரோட்டேரியன் நிக்கோலஸ் பிரான்சிஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, “வெற்றிக்கான ABC மந்திரம்” என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்புரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் டாக்டர் பி. பாலமுருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ரோட்டராக்ட் மற்றும் இன்டராக்ட் – ஜெம்ஸ் தலைவர் ரோட்டேரியன் வி.கே. கண்ணன் பாராட்டு நிகழ்வில் பங்கேற்றார்.
விழாவில் புதிய நிர்வாகிகளாக ரோட்டேரியன் பி.எச்.எஃப். பி.வி. குப்புராஜ் – தலைவர், ரோட்டேரியன் எம். செல்வ பிரகாஷ் – செயலாளர், ரோட்டேரியன் எம். கார்த்திக் ராஜ் – பொருளாளர் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மாணவர்களிடையே தலைமைத்துவ பண்பு, சமூக சேவை மனப்பான்மை மற்றும் ரோட்டரி சேவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழா நடைபெற்றது.