சென்னை, அக். 10-
மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு கோடானகோடி நன்றி- மரகதம் குமரவேல்- மதுராந்தகம் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை வகிக்கிறார். திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த அவர், வாக்காளர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து, மக்களுக்காக பணியாற்றுவேன் என உறுதியளித்தார்.
மதுராந்தகம்
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் தமிழக வெற்றிக்கழக கட்சி வேட்பாளர் மரகதம் குமரவேல் முன்னிலை வகித்து வருகிறார்.
தற்போதைய நிலவரப்படி தி.மு.க. வேட்பாளர் பரந்தாமனை விட 12,774 வாக்குகள் பெற்று மரகதம் குமரவேல் முன்னிலையில் உள்ளார். இதனால் கிட்டத்தட்ட மரகதம் குமரவேலின் வெற்றியானது உறுதிசெய்யப்பட உள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து முன்னிலை வகிக்கும் நிலையில், மதுராந்தகம் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சென்று முருகப்பெரு
மானை தரிசனம் செய்தார்.
இதற்கிடையே, த.வெ.க. வேட்பாளர் மரகம் குமரவேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுராந்தகம் தொகுதி வாக்காளர்களுக்கு கோடானகோடி நன்றி. நான் ஆளுங்கட்சி எம்எல்ஏவாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என நினைத்து வாக்களித்தனர். புரட்சித் தலைவரை போல் முதலமைச்சர் விஜய் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். மக்கள் எழுச்சியாக த.வெ.க.வை வரவேற்கிறார்கள்.
தாராபுரம்
இதேபோல் தாராபுரம் தொகுதியில் பொதுத்தேர்தலின்போது 89.96 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இடைத்தேர்தலில் அது 80.30 சதவீதமாக குறைந்தது.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் 16 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், தி.மு.க வேட்பாளர் சுகன்யாவை பின்னுக்குத் தள்ளி, 48,675 வாக்குகள் பெற்று த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா முன்னிலையில் உள்ளார்.
தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கையில் மட்டுமே த.வெ.க முன்னிலை வகித்த நிலையில், அடுத்தடுத்த நிலைகளில் அ.தி.மு.க வேட்பாளர் கே. பானுமதி முன்னிலை வகித்தார்.
ஆனால், 5-ஆவது சுற்றில் இருந்து தற்போது 16-ஆவது சுற்று முடிவில் 9,636 வாக்குகள் கூடுதல் பெற்று த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை பெற்று வருகிறார். இவருக்கு அடுத்ததாக இருந்த அ.தி.மு.க வேட்பாளரை 11-ஆவது சுற்றிலிருந்து பின்னுக்குத் தள்ளி, தி.மு.க வேட்பாளர் சுகன்யா தற்போது 39,039 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
16-ஆவது சுற்று நிலவரம்
பதினாறாவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா 48,675 வாக்குகள் பெற்றுள்ளார். முறையே, தி.மு.க வேட்பாளர் சுகன்யா 39,039 - அ.தி.மு.க கே. பானுமதி 31,067 - நாம் தமிழர் கட்சியின் கார்த்திகா 3,934 - கம்யூனிஸ்ட் வேட்பாளர் 882 வாக்குகள் பெற்றுள்ளனர்.
இறுதிச்சுற்றில் தாரா
புரம் தவெக. வேட்பாளர் சத்தியபாமா வெற்றி பெற்றார்.