பினாமி மூலம் குவாரி பணம் சுரண்டல்:

அரசு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை

மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து


மதுரை, அக். 13-

மதுரை மாவட்டம், கப்பலூரைச் சேர்ந்த சரவணக்குமார். ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் அருகே கருவேலம்பட் டியில் பட்டா நிலத்தில் கல்குவாரி நடத்த அனு மதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அருகிலுள்ள புறம்போக்கு நிலங்களி லும் சட்டவிரோதமாக கல்குவாரி நடக்கிறது. இங்கு அதிகளவிலான ஆழத்தில் கனி மங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. எனவே, புறம்போக்கு நிலத்தில் சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்த கல்குவாரி உரிமையாளர்களான தவெக பிரமுகர் பாரி, முருகேசன் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும், சம்பந்தப்பட்ட குவாரி உரிமத்தை ரத்து செய்யுமாறும் மதுரை கலெக்டருக்கு உத்தரவிடக் கோரி மனு செய்திருந்தேன்.

இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அங்கு கிரஷிங் யூனிட், எம்-சாண்ட் யூனிட், பிட்மென் (தார்) பிளான்ட் செயல்பட அனுமதி இல்லை. அரசு தரப்பில் விசாரணை நடத்தி, பாரி, முருகேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்பூர்வ நடவடிக்கை, அபராதம் வசூலித்து அரசு கணக்கில் சேர்ப்பது வரையிலான பணிகளை மேற்கொள்ளும் அரசு அதிகாரிகள் குழுவின் நடவடிக்கையை மதுரை கலெக்டர் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.

எனவே, மதுரை கலெக்டராக இருந்த பிரவீன்குமார், டிஆர்ஓஅன் பழகன், கனிமவள உதவி இயக்குனர் விஜயகுமாரன், திருப்பரங்குன்றம் தாசில்தார் கவிதா மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதிகள் பி.வேல்முருகன். கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “வரு வாய்த்துறை அதிகாரிகள் பினாமி பெயரில் குவாரி நடத்துவது. ஓய்வு பெற்ற பின் செட்டில் ஆகிவிட வேண்டியது என்று இருக்கின்றனர். போலீஸ்காரர்கள் தான் கஞ்சா விற்க ஏஜென்ட் வைக்கிறார்கள். வருவாய்த்துறை அதிகாரிகள் குவாரி வைத்து, பணத்தை சுரண்டுவதற்கு பினாமி வைத்துக் கொள்கிறார்கள். நீதிமன்றத்திற்கு வந்தவுடன் ஆக்சன் காட்டுகின்றனர்” என்றனர். பின்னர் இவ்வழக்கில் மதுரை கலெக்டர். ஆர்டிஓ உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜராக உத்தர விட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.