கேரளா, அக். 13-

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரள உயர்நீதி

மன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ள

ப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் என்ற நிறுவனத்திடமிருந்து முறைகேடாக பணம் பெற்றதாக இந்த வழக்கில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பினராயி விஜயனின் மகள் வீணா நடத்தி வந்த எக்ஸாலாஜிக் சொல்யூ

ஷன்ஸ் என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தி

ற்கு அந்த நிறுவனம் ஐ.டி ஆலோசனை சேவைகள் என்ற பெயரில் பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் எந்தவிதமான சேவையும் வழங்கப்பட

வில்லை என்றும், இந்தப் பணம் லஞ்சமாகவே வழங்கப்பட்டது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மொத்தம் சுமார் ரூ.2.78 கோடி அளவிலான தொகை இவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பரிவர்த்தனைகள் பினராயி விஜயன் முதலமைச்சராக இருந்த காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மகள் வீணா மூலமாக இந்த நிதி பெறப்பட்டதாகவும், அதில் ஒரு பகுதி துபாய்க்கு மாற்றப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தனது விசாரணையில் கண்டறிந்ததாகத் தெரிவிக்கிறது. பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் உள்ளிட்டோர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு

ள்ளதாகக் குறிப்பிடப்பட்டு

ள்ளது.அமலாக்கத்துறை தனது விசாரணையில் சேகரித்த ஆதாரங்களை மாநிலக் காவல்துறைக்கு அனுப்பி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு கோரியது.

ஆனால் மாநில அரசு உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் முதற்கட்ட விசாரணை நடத்த சிறப்புக் குழு அமைத்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்ய

ப்பட்ட மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் தெளிவாக இருப்பதால் மேலதிக முதற்கட்ட விசாரணை தேவையில்லை எனத் தெரிவித்தது. உடனடியாக வழக்கு பதிவு செய்யுமாறு லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குநருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்த உத்தரவைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் பினராயி விஜயன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ள

ப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அளித்த அறிக்கையின் அடிப்படை

யில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.