சென்னை, அக். 1-

ஆயுத பூஜை, தசரா பண்டிகைக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் தற்போதே பஸ்கள், ரயில்களில் டிக்கெட்டுகள் தீர்ந்துவிட்டன.

இந்நிலையில் ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4,899-க்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வழக்கத்தை விட 5 மடங்கு உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளன. ஆயுத பூஜை, தசரா பண்டிகை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதால் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வசித்து வரும் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். வேலை, தொழில் என்ற பல்வேறு காரணங்களால் தலைநகர் சென்னையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

பண்டிகை காலங்களில் சொந்த ஊர் சென்று குடும்பத்துடன் கொண்டாட விரும்புவர். ஆனால் பண்டிகைக்கு இரு தினங்களுக்கு முன்பாக மொத்தமாக லட்சக்கண

க்கானோர் சொந்த ஊர் புறப்படுவதால் பஸ்கள், ரயில்களில் கூட்டம் அதிகரிக்கும். இதனால் பல நாட்களுக்கு முன்பாகவே பலரும் பஸ்களில், ரயில்களில் டிக்கெடுக்களை முன்பதிவு செய்துவிடுவார்கள். அரசு பேருந்துகள் தான் இப்படி என்றால், ஆம்னி பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு அதிகரித்துள்ளது.

அதே நேரம் பண்டிகை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகரிப்பதை பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளில் கட்டணமானது பல மடங்கு உயர்த்தப்படுகிறது. இது தொடர்பாக தமிழக அரசிடம் பயணிகள் புகார்களை அடுக்கினாலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்தேறி வருகின்றனர். குறிப்பாக இந்த முறை தசரா, ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் அக்டோபர் 16 ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் ஆம்னி பேருந்தில் கட்டணம் வழக்கத்தை விட 5 மடங்கு உயத்தப்பட்டு ரூ.4,899 என நிர்ணயிக்கப்ப

ட்டுள்ளது.

வழக்கமான கட்ட

ணத்தை விட 5 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படுவதால், சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி (திங்கட்கிழமை) ஆயுத பூஜையும், 20 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) விஜயதசமியும் வருகிறது. சனி மற்றும் ஞாயிறு வார விடுமுறை என்பதால் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமையே பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

இதன் காரணமாக அக்டோபர் 16 ஆம் தேதியில் ஆம்னி பஸ்களில் கட்டணம் 5 மடங்கு வரை உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில் செல்ல ரூ.4,599 கட்டணமும், தென்காசி செல்ல ரூ.5,000 கட்டணமும், தூத்துக்குடி செல்ல ரூ.3,999 கட்டணமும், மதுரை செல்ல ரூ.4,899 கட்டணமும், கோவை செல்ல ரூ.5,999 கட்டணமும், ஈரோடு செல்ல ரூ.5,399 கட்டணமும் நேற்றைய நிலவரப்படி வசூலிக்கப்பட்டுள்ளது.

தற்போதே அதாவது 20 நாட்களுக்கு முன்பே கட்டணம் இவ்வளவு கூடியிருக்கும் நிலையில் வரும் நாட்களில் இன்னும் எவ்வளவு அதிகரிக்குமோ என பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசு தலையிட்டு ஆம்னி பேருந்து கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.