சென்னை, அக். 17-

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மாநிலம் முழுவதும் அரசியல் பிரச்சாரத்தை முன்னெடுக்க திமுக தலைமை திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் திமுகவை விமர்சித்து வரும் நிலையில், அவர்களுக்கு எதிராக திமுக தலைமை கடுமை

யான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மாநிலம் முழுவதும் காங்கிரஸுக்கு எதிராகப் பிரச்சாரம் நடத்துவது குறித்து திமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையிலான அரசியல் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியதாக வெளி

யாகியுள்ள தகவல்கள் திமுக தலைமையிடமும் தொண்டர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணியிலிருந்து விலகுவது தொடர்பாக திமுக தலைமையுடன் முறையான ஆலோசனை நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.

இதற்கிடையே, மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திமுகவின் அரசியல் அணுகுமுறையை விமர்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையா

ளர்கள் கருதுகின்றனர். டெல்லி அரசியலில் திமுகவின் பங்களிப்பு மற்றும் மாநில அளவிலான கூட்டணி உறவுகள் குறித்த விவாதங்க

ளும் இந்தப் பின்னணியில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்தச் சூழலில், தேசிய அளவில் மாற்று அரசியல் அணியை உருவாக்குவது குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திமுக துணைப் பொதுச்செய

லாளர் கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் பல்வேறு மாநிலக் கட்சிகளின் தலைவர்க

ளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்களுடன் நடைபெறும் அரசியல் பேச்சுவார்த்தைகள், எதிர்காலக் கூட்டணி கணக்குகள் தொடர்பான விவாதங்களை அதிகரித்துள்ளன.