புதுடெல்லி, அக். 9-
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று கூறி கடந்த சில தினங்களாக டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், நேற்று (அக்டோபர் 7) மத்திய டெல்லியில் உள்ள ஜன்பாத்தில் இருக்கும் சாகர் ரத்னா உணவகத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களுக்கு அளித்த மதிய விருந்துடன், பரபரப்பான சம்பவங்கள் மிகவும் அமைதியாகத் தொடங்கின.
உணவகத்திற்கு வெளியே எம்.பி.க்களின் நடமாட்டத்தைத் தடுக்க காவல்துறை தயாராக இருந்தபோதிலும், உள்ளே இருந்த சூழல் நம்பிக்கை
யுடன் காணப்பட்டது. அதே சமயம் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் தாங்கள் “சரியான திசையில்” முன்னேறி வருவதாகவும், அரசு “பின்னடைவைச் சந்தித்துள்ளது” என்றும் பேசிக் கொண்டனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில், தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பாலான தலை
வர்கள் வடஇந்திய உணவு
களையும், வடமாநிலங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பொதுவான “தென்னிந்திய உணவுகளையும்” ஆர்டர் செய்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. இட்லி, தோசையிலிருந்து உத்தப்பம், வடஇந்திய மற்றும் தென்னிந்திய ‘தாலி’ உணவுகள் வரை தட்டுகளில் பலவிதமான உணவுகள் பரிமாறப்பட்டன.
ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள், பரபரப்பான சூழ்நிலையில் காவல்துறை
யினரால் கைது செய்யப்
பட்டனர்.காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கார்கே, கே.சி.வேணுகோபால், ஆர்ஜேடியின் மனோஜ் ஜா, ஐயூஎம்எல்-ன் ஈ.டி.முகமது பஷீர், சிபிஐ-ன் பி.சந்தோஷ் குமார், சிபிஎம்-ன் ஜான் பிரிட்டாஸ் மற்றும் பிற கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட 12 தலைவர்கள் முக்கிய மேஜையில் அமர்ந்திருந்த
னர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தான் ஆர்டர் செய்த உணவை மற்றவர்க
ளுடன் பகிர்ந்து கொண்ட
தாக விருந்தில் பங்கேற்ற
வர்கள் தெரிவித்தனர்.
மதிய உணவிற்குப் பிறகு உணவகத்தில் இருந்து வெளியேறிய எம்பிக்கள், வெளியே கூடியிருந்த ஊடகங்களிடம் பேசுகையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களைச் சந்திக்க அனுமதிக்குமாறு வலியுறுத்தி, தொடர்ந்து இரண்டாவது நாளாக அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் வெளியே நிறுத்தப்பட்டுள்ள மூன்று சொகுசு பேருந்துகளில் ஜந்தர் மந்தர் நோக்கிச் செல்லவுள்ளதாக அறிவித்தனர்.