குலசேகரன்பட்டினம், அக். 13-

குலசேகரன்ப

ட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கொடி

யேற்றத்துடன் கோலா

கலமாக தொடங்கியது.

திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினத்தில் ஞானமூர்த்தீஸ்வரர் முத்தாரம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக தசரா திருவிழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்நிலையில் அதிகாலையில் அம்பாளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின் கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கியது. அப்போது அங்கு கூடி

யிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி, ஓம் சக்தி, பராசக்தி என்று முழக்கமிட்டனர்.

தொடர்ந்து கோவிலுக்கு வந்த தசரா குழுவினர் மற்றும் பக்தர்கள் மாலை அணிந்துகொண்டு, கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 20 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குலசேகரன்ப

ட்டினம் கடற்கரையில் சூரசனை அம்மன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா களை

கட்டியதையடுத்து திருச்செந்தூர் - குலசேக

ரன்பட்டினம் மற்றும் திருச்செந்தூர் - திரு

நெல்வேலி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.