புதுடெல்லி, அக். 13-

மோடி தலைமையிலான மத்திய அரசின் 200 அதிகாரிகள் எதிர்க்கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அரசியலமைப்பை காப்பாற்ற போராட்டம் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது தேர்தல் முறைகேடு புகார்களை முன்வைத்து, இந்தியா கூட்டணித் தலைவர்கள் திங்கள்கிழமை மாலை 3 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசில் உள்ள 200 அதிகாரிகள் எதிர்க்கட்சிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், தங்களுக்குத் தகவல்களை வழங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.